Header Ads

Header ADS

மூடநம்பிக்கை கொண்டவரா ‛தல’ டோனி; வாழ்த்து சொல்லவே மாட்டாராம் ஓஜா ‛பளீச்’

மும்பை, ஏப்.23-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல டோனி பற்றி இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரகசியம் ஒன்றை கூறியுள்ளார். இதன்மூலம் டோனி மூடநம்பிக்கை கொண்டவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூடநம்பிக்கை வீரர்கள்

கிரிக்கெட்.... இந்தியாவில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கட்டிப்போட்டு வைத்திருக்கும் விளையாட்டு. ‛ஜென்டில்மேன்’ விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் பலவீரர்கள் மூடநம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு இருக்கும் திறமைகளை முழுவதுமாக நம்பினாலும் கூட அதிர்ஷ்டம் வேண்டும் என்ற நோக்கில் மூடநம்பிக்கையாக சில விஷயங்களை பின்பற்றுகிறார்கள்.

சச்சின், சேவாக், காம்பீர்

கிரிக்கெட்டின் கடவுள் சச்சின், ஒவ்வொரு முறை பேட் செய்ய தயாராகும்போது முதலில் தனது இடதுகாலில் தான் ‛பேடு’.அணிவார். இது தனக்கு அதிர்ஷ்டத்தை தருவதாக அவர் நம்பினார். சேவாக், தனது டீசர்ட்டில் எண் இல்லாமல் அணிவதை வாடிக்கையாக வைத்திருந்தார். முக்கிய போட்டியில் காம்பீர் அவுட் ஆனாலும் இறுதிவரை தனது ‛பேடு’ கழற்றாமல் இருப்பார். இது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என காம்பீர் நம்பினார்.

இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் ‛ஸ்டீவ் ஸ்மித்’ எப்போதும் தனது ஷூ ‛லேஸ்’ தெரியாதபடி ‛பேடு’ கட்டுவார். இது அவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக நம்புகிறார்.  மேலும் பல வீரர்கள் தங்களது ராசியான ஜெர்சி, கையுறை உள்ளிட்டவற்றை அணிவதுண்டு.

டோனியின் ரகசியம்

இந்நிலையில் தான்  மூட பழக்கவழக்கம் கொண்ட வீரர்கள் வரிசையில் இந்தியாவின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல்.லில் சென்னை அணியின் கேப்டனுமான ‛தல’ டோனியும் இணைந்துள்ளார்.

அதாவது டோனி ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் டோனி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கமாட்டாராம். இதற்கு பின்னணியில் இருக்கும் ரகசியம் குறித்து சென்னை அணியில் டோனியுடன் விளையாடிய இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஒஜா கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

கடினமான டோனி

போட்டி தொடங்குவதற்கு முன்பு டோனி ஒருபோதும் தனது அணி வீரர்களுக்கு ‘ஆல்தி பெஸ்ட்’ அல்லது ‘குட்லக்’ என வாழ்த்து தெரிவிப்பது இல்லை. இதற்கு முன்பு ஒரு போட்டியில் சில வீரருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தாராம். அப்போட்டி அவர்களுக்கு சரியானதாக அமையவில்லை. அத்தருணத்தை டோனி கடினமாக உணர்ந்தார். அதன்பின் டோனி ஒருபோதும் வாழ்த்து தெரிவிப்பது இல்லை. 

ஒருமுறை அணியில் அனைத்து வீரர்களும் கலந்துரையாடினோம். ஒவ்வொரு வீரரும் பின்பற்றும் நம்பிக்கை குறித்து பேசியபோது டோனியே இதுபற்றி தெரிவித்தார்.

இவ்வாறு ஓஜா கூறினார்.

No comments

Powered by Blogger.