ஐ.பி.எல். போட்டி தேவைதானா; கொரோனா பரவலால் கில்கிறிஸ்ட் கேள்வி; பொதுமக்கள் சொல்வதென்ன
சிட்னி, ஏப்.25-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தேவைதானா என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.பி.எல்.லில் கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆடம் கில்கிறிஸ்ட். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னான இவர் அதிரடி ஆட்டக்காரர். ஐ.பி.எல். தொடக்கத்தில் ஐதராபாத்(அப்போது டெக்கான் சார்ஜர்ஸ்) அணியின் கேப்டனாக செயல்பட்டார். இவர் தலைமையில் 2009ல் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2011 வரை ஐ தராபாத் அணிக்காக விளையாடியவர் அதன்பிறகு பஞ்சாப் அணியில் ஆட்டத்தை தொடர்ந்தார். தற்போது அவர் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
டுவிட்டர் பதிவு
இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், நாட்டு மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டி தேவைதானா என கேள்வியும் எழுப்பி உள்ளார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஐ.பி.எல். பொருத்தமற்றது இல்லையா
மக்கள் கருத்து
இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் ஐ.பி.எல். கட்டாயமாக நடக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஒருவர் கூறுகையில், ‛‛நாள் முழுவதும் கொரோனா தொடர்பான செய்தியை பார்த்து பதறும் எங்களுக்கு ஐ.பி.எல். ஒரு பொழுதுபோக்காக உள்ளது. நல்லவிஷயம் தான். உங்களது பிரார்த்தனைக்கு நன்றி’’ என கூறியுள்ளார்.
இன்னொருவர், ‛‛கொரோனா பரவும் சூழலில் ஐ.பி.எல். போட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் வெளியே செல்லவிடாமல் சுயஊரடங்கை ஏற்படுத்தி உள்ளது. இது அவசியமானது தான்’’ என்றார்.
No comments