ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு; இந்தியாவில் 21 பேரை தாக்கியது
புதுடெல்லி, டிச.6-
இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 17 பேரை தாக்கியதால் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 21 ஆக அதிகரித்துள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பு
தென்ஆப்பிரிக்காவில் தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ் பரவல் படிப்படியாக பிற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் டிச.,2ல் 2 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
இதில் 66 வயது முதியவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர். இன்னொருவர் 44 வயது டாக்டர் ஆவார். இவர் பயணங்கள் ஏதுவும் மேற்கொள்ளாத நிலையில் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு குஜராத்தை சேர்ந்த 72 வயது வெளிநாட்டு வாழ் இந்தியரும், மராட்டிய மாநிலம் டோம்பிலியை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.
புதிதாக 17 பேரை தாக்கியது
தற்போது இந்தியாவில் மேலும் 17 பேருக்கு நேற்று ஒமிக்ரான் பாதிப்பு உறுதியானது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள். சிலர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
நேற்றை பாதிப்பை பொறுத்தமட்டில் டெல்லியை சேர்ந்த 37 வயது நபர் தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பார்க்கில் இருந்தார். தான்சானியா நாட்டில் இருந்து டோஹா வழியாக டெல்லிக்கு வந்த நிலையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கூட ஒமிக்ரான் வைரஸ் தாக்கியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
மேலும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உள்பட 9 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பிம்ரி சின்ஞ்வாட் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரையும் ஒமிக்ரான் வைரஸ் தாக்கியுள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 44 வயது பெண், அவரது 18, 12 வயது மகள்கள், 45 வயது அண்ணன், அவரது 2 மகள்கள் ஆகியோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தவிர பின்லாந்தில் இருந்த தாயகம் திரும்பிய ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மராட்டியத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 8 ஆக அதிகரித்துள்ளது.
எகிறிய பாதிப்பு; பயணக்கட்டுப்பாடு
இதன்மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக எகிறியுள்ளது. இதுவரை மாநிலம் வாரியாக கர்நாடகாவில் 2, மராட்டியத்தில் 8, ராஜஸ்தானில் 9, டெல்லி, குஜராத்தில் தலா ஒன்று என மொத்தம் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் டிசம்பர் 2ல் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் விமான பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்தி உன்னிப்பாக கவனிக்கவும் மத்திய, மாநில அரசகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
* ஒமிக்ரான் வைரஸால் இந்தியாவில் கொரோனா 3ம் அலை; சி.ஐ.எஸ்.ஆர்., புதுக்குண்டு
* கொரோனா புதிய வைரஸ் கிளம்பியது எங்கிருந்து... உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன...
* ஒமிக்ரான் வைரஸ் ஏன் வீரியமானது; மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
What's a gambling game? - KTNV
ReplyDeleteOnline gambling is more about 구미 출장샵 picking winners. 계룡 출장마사지 In fact, gambling games have become 출장샵 a staple among American When the question of casino 대구광역 출장마사지 games 고양 출장샵 was