Header Ads

Header ADS

டோனி இல்லையேல், நானும் விளையாட மாட்டேன்; ஐ.பி.எல். பற்றி ரெய்னா கூறியது என்ன

சென்னை, ஜூலை 10-

‛‛ஐ.பி.எல். அடுத்த சீசனில் சென்னை அணியில் டோனி இல்லையேல் நானும் விளையாடமாட்டேன் ’’ என ‛சின்னதல’ ரெய்னா கூறினார்.

தல, சின்னதல

சென்னை சூப்பர் கிங்ஸ்(சி.எஸ்.கே.) அணியின் கேப்டனாக இருப்பவர் டோனி. இவரை ரசிகர்கள் அன்போடு ‛தல’ என அழைத்து வருகிறார்கள். அதே அணியில் துணை கேப்டனாக இருக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கு ‛சின்னதல’ என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். 

சென்னை அணியை பொறுத்தமட்டில் டோனியையும், ரெய்னாவையும் நாணயத்தின் இருபக்கங்களாக ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஏனென்றால் ஐ.பி.எல். தொடங்கிய 2008ல் இருந்து(சென்னை அணிக்கு தடை விதித்த 2016, 2017 இரு ஆண்டுகள் தவிர்த்து) இருவரும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

ஐ.பி.எல்.லில் டோனி ஓய்வா

இந்நிலையில் ஜூலை 7ல் டோனி தனது 40வது  பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனிக்கு நடப்பு ஐ.பி.எல். சீசன் தான் கடைசியாக இருக்கும் என்ற தகவல் பரவுகிறது. இதுபற்றி ‛சின்னதல’ ரெய்னா கூறியதாவது:

நானும் விளையாடமாட்டேன்

அடுத்த ஐ.பி.எல். சீசனில் டோனி விளையாடவில்லை எனில் நானும் போட்டிகளில் பங்கு பெறமாட்டேன். சென்னை அணிக்காக இருவரும் 2008 முதல் விளையாடி வருகிறோம். இந்த ஆண்டு ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வெல்லும்பட்சத்தில் இன்னொரு சீசன் விளையாடும்படி டோனியிடம் கூறுவேன்.

அடுத்த சீசனில் புதிதாக 2 அணிகள் வர உள்ளன. இருப்பினும் நான் சென்னை அணிக்கே விளையாட விரும்புகிறேன். நடப்பு சீசனில் நன்றாக விளையாடுவோம் என நம்புகிறேன். பொறுத்திருந்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்ன’’ எனக்கூறினார்.

ஒரேநாளில் ஓய்வு

முன்னதாக 2020 ஆகஸ்ட் 15ல் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

தற்போது இருவரும் சேர்ந்து ஐ.பி.எல்.லில் சென்னை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.