Header Ads

Header ADS

‛‛இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படமாட்டேன்’’; சுனில் கவாஸ்கரின் இப்படிகூற காரணம் தெரியுமா

மும்பை, ஜூன் 07-

இந்திய அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட மாட்டேன் என முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அதற்கு காரணமாக புதிதாக ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். பேட்டிங்கில் சிறந்து விளங்கிய இவர் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராக இருக்கிறார்.

இவர் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். இதனால் தான் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக மாற நான் ஒருபோதும் விருப்பப்படுவது கிடையாது என அவர் கூறியதோடு, அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பந்துக்கு பந்து பார்ப்பது இல்லை

நான் விளையாட தொடங்கிய காலம் முதல் தீவிரமாக கிரிக்கெட் பார்ப்பேன். விரைவில் அவுட்டானாலும் கூட மற்ற வீரர்களின் விளையாட்டை ரசிப்பேன். இருந்தாலும் போட்டியின் நடுவே அவ்வப்போது ஓய்வறைக்கு சென்று விருப்பமான ஒன்றை படிப்பேன், கடிதங்களுக்கு பதில் எழுதுவேன்.

தொடர்ச்சியாக பந்துக்கு பந்து முழு கிரிக்கெட்டையும் நான் பார்ப்பது கிடையாது. ஆனால் ஒரு அணியின் பயிற்சியாளர் அல்லது தேர்வாளராக ஆக விரும்பினால் போட்டியை ஒரு பந்துவிடாமல் பார்க்க வேண்டும். இதனால் நான் அதற்கெல்லாம் விருப்பப்படுவது இல்லை.\

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.