Header Ads

Header ADS

கட்டிப்புடி வைத்தியம் தந்திருப்போம்; மேக்ஸ்வெல்லால் பஞ்சாப்பை கலாய்த்த பெங்களூரு

 


சென்னை, ஏப்.10-

மும்பைக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை மேற்கொள்காட்டி, அவரை விடுவித்த பஞ்சாப் அணியை பெங்களூரு அணி நிர்வாகம் கலாய்த்துள்ளது.

பெங்களூரு வெற்றி

2021ம் ஆண்டுக்கானஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்(ஆர்.சி.பி.) அணிகள் மோதின.

இதில் விராட் கோலியின் பெங்களூரு அணி கடைசி பந்தில் வென்றது. ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது.

மேக்ஸ்வெல் அதிரடி

இந்த போட்டியில் பெங்களூரு அணியில் புதிதாக இணைந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். சிக்சர், பவுண்டரிகள் விளாசி தள்ளினார். ‛ரிவர்ஸ்ஸ்வீப்’ ஷாட்டுகள் அடித்து அசத்தினார்.


குர்னால் பாண்ட்யா வீசிய 11 ஓவரில் 100 மீட்டரில் இமாலய சிக்சரை பறக்கவிட்டார். அவர் அடித்த பந்து மைதானத்தின் மேற்கூரையில் போய் விழுந்தது.  28 பந்துகள் சந்தித்த மேக்ஸ்வெல் 39 ரன்களில் அவுட் ஆனார்.  இவரது இந்த ஆட்டம் பெங்களூரு வெற்றி பெற உதவியாக இருந்தது.

பஞ்சாப்பை கலாய்த்த ஆர்.சி.பி.

கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் வெறும் 108 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் இந்த முறை அவரை பஞ்சாப் அணியில் இருந்து கழற்றிவிட்டது. அவரை ரூ.14.25 கோடிக்கு ஆர்.சி.பி. அணி தட்டித்தூக்கியது.

இந்நிலையில் தான்  மேக்ஸ்வெல்லை அணியில் இருந்து விடுத்த பஞ்சாப்பிற்கு, ஆர்.சி.பி. அணி கிண்டலாக நன்றி தெரிவித்து கலாய்த்துள்ளது. இதுதொடர்பாக ஆர்.சி.பி., அணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கட்டிப்புடி வைத்தியம்

‛‛சிவப்பு மற்றும் தங்கநிற ஜெர்சி(ஆர்.சி.பி.) அணியின் முதல் சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல் அடித்த இந்த பந்து  சென்னை மைதானத்தை தாண்டிபோய் விழுந்துள்ளது 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நன்றி. இப்போது மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றும் நிலை இல்லாவிட்டால் உங்களுக்கு கட்டிப்புடி வைத்தியம் தந்திருப்போம்’’ என கலாய்த்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பஞ்சாப் அணியும் ஒரு டுவிட் செய்தது. அதில், ‛‛எங்கள் அணிக்காக கெயில், கே.எல்.ராகுல், மன்பிரீத்சிங்,  சர்ப்ராஸ் கான், மயங்க் ஆகியோரை கொடுத்ததற்கு நன்றி’’ என கூறியுள்ளது.

பஞ்சாப் அணி குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் முதலில் ஆர்.சி.பி., அணியில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.சி.பி., பஞ்சாப் அணியினரின் இந்த டுவிட்டர் பதிவுகள் ரசிகர்களை ரசிக்க செய்துள்ளன.

No comments

Powered by Blogger.